價格:免費
更新日期:2019-02-15
檔案大小:11M
目前版本:1.0
版本需求:Android 4.4 以上版本
官方網站:http://scienceoffortune.com/
Email:myfortune6@gmail.com
聯絡地址:GURUSWAMY LLC C/o SMK COnsulting LLC,10924 VAnce JAckson Suite-404 San Antonio, TX 78230 United States +1 (210) 315-2408
“அதிர்ஷ்ட விஞ்ஞானம்” என்னும் அற்புத எண்சோதிட நூல் பண்டிட் ஸேதுராமன் அவர்களால் 1954ம் ஆண்டில் வெளியிடப்பட்டு உலக பிரசித்தி பெற்றது. சுய விளம்பரமும், விற்பனை முயற்சியும் இன்றி 2014ம் ஆண்டு வரை 27 பதிப்புகள் விற்பனையாகியுள்ளது இதன் மகத்துவத்திற்கு சான்று. சால்திய எண் கணித முறைப்படி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். உலகில் முதல்முறையாக 108 எண்கள் வரை பலன் கூறப்பட்டுள்ளது இதன் சிறப்பு ஆகும்.
இந்நூல், பிறந்த தேதிக்கேற்றவாறு ஒருவர் எவ்வாறு தன் பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், முக்கியமான காரியங்களை எந்தெந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குகிறது. 7,8,16,22,26,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண்கள் 18,29,44,49,63,87 என அமைய பெற்றவர்களும் தமது வாழ்க்கையை ஒரு மறு ஆய்வு செய்யவும், எண்களின் எதிர்மறையான அதிர்வுகளை நிவர்த்தி செய்து வெற்றி காண உதவும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூல் ஆசிரியர்களின் வாடிக்கையாளர் வரிசையில், மன்னர்களும், மந்திரிகளும், தொழில்அதிபர்களும், அறிவியல் மேதைகளும் பல தரப்பட்ட பாமரமக்களும் உள்ளனர் என்பது, எண்களால் ஏற்றம் பெற எதுவுமே தடையல்ல என்பதை தான் காட்டுகிறது. குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்கள், நிறைந்த அதிர்ஷ்டம் பெறவும், அதிர்ஷ்டசாலிகள் எனப்படுவோர் மேன்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும் வழிகாட்டும் இந்நூல் வாசகர்களின் வாழ்க்கை துணையாக அமையும்.
வெற்றியின் சிகரத்தை அடைய உதவுவது மட்டுமன்றி அங்கு நிரந்தரமாக வாழவும் முடியும் என்று உறுதிப்பட கூறுவது இந்நூல் ஒன்றே. தெள்ளியநடையில் எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எளிய முறையில் எழுதி வெளியிடப்பட்ட அறிய எண்சோதிட நூல் “அதிர்ஷ்ட விஞ்ஞானம்” ஒன்று தான்.
“அதிர்ஷ்ட விஞ்ஞானம்” உங்கள் கையில் என்றால் அதிர்ஷ்டமே உங்கள் கையில் தான்!
ஆசிரியரைப் பற்றி...
பண்டிட் ஸேதுராமன் அவர்கள் 1925 ம் ஆண்டு மே மாதம் 31 ம் தேதியன்று பிறந்தவர். திருச்சியில் தன் கல்வியை முடித்தபின், இரண்டாம் உலகப்போரின் போது, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் சைன்யத்தில் அலுவலராகப் பணியாற்றினார். கூர்மையான அறிவும், குன்றாத உழைப்பும் இளம் ஸேதுராமனுக்கு ஏற்றமிகு வாழ்வை அளித்தது. அதுமட்டுமின்றி, ஆராய்ச்சித்திறனும் ஆன்மீக உணர்வும் பெற்றிருந்த அவருக்கு, அதீத சக்திகளை அறியும் ஆற்றலும் இருந்ததால், எண்ணற்ற படைவீரர்களின் வாழ்க்கை, வெற்றி தோல்விகள், மரணம் பற்றிய தகவல்களைப் பகுத்தறியும் வாய்ப்பும் கிட்டியது. மனிதர்களின் பிறந்த தேதியிலும் பெயரழுத்துக்களிலும் உள்ள எண்களுக்கும், அவர்தம் வாழ்க்கை நிகழ்வுகளும், வானில் சுழலும் கோள்களின் வாயிலாக ஒரு மாறாத தொடர்பு உண்டு என்ற பேருண்மை அப்போதுதான் அவருக்குப் புலப்பட்டது.
அன்று முதல் தன் பிறப்பின் குறிக்கோள் மானிடரைக் கடைத்தேற்றுவதே என்றுணரத் தொடங்கினார். எண் ஜோதிட சாஸ்திரம் என்ற அந்த அற்புதக் கலையில் எல்லையற்ற திறமை பெற்றிருந்த அவர், பணமும் அந்தஸ்தும் தனக்கு அளித்த தன் பதவியைத் துறந்து, நியூமராலஜி எனப்படும், எண்களால் அதிர்ஷ்டம் அளிக்கவல்ல தெய்வீக கலையால் உலக மாந்தர்க்கு உதவுவதே தன் குறிக்கோள் என உறுதி பூண்டார். அவ்வாறு தமிழில் 1954-ம் ஆண்டு புத்தக உலகில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதுதான், அவர் எழுதிய “அதிர்ஷ்ட விஞ்ஞானம்” என்ற அற்புத நூல் ! அந்நூலிள் பதிமூன்றாவது பதிப்பு 1997-ல் வெளிவந்த சிறிது காலத்திற்க்குப்பின், மாமேதை பண்டிட் ஸேதுராமன் இறைவனடி சேர்ந்தார்.
பண்டிட் அவர்களின் புதல்வரும் சிஷ்யருமான திரு.வி.எஸ்.குருசுவாமி அவர்கள் தன் தந்தையாரின் உன்னதமான சேவையைத் தொடர்ந்து செய்வதுடன் அதிர்ஷ்ட விஞ்ஞானத்தின் ஆங்கிலப் பதிப்பான “SCIENCE OF FORTUNE” என்னும் நூலினை உலகின் அனைத்து தரப்பு வாசகர்களுடைய நன்மையைக் கருதி வெளியிட்டுள்ளார். இதுவெறும் நூல் அல்ல, அமைதியையும் அருஞ் செல்வத்தையும் பெற உதவும் வழிகாட்டி!
ஒரு புகழாரம்
“நான் இதுவரை கணிதம் என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற நான்கினை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனால், பண்டிட் ஸேதுராமன் என்ற இந்த இளைஞர் கணிதத்திற்கு ஐந்தாவது பயன்பாடும் ஒன்று உண்டு என்ற அதிசயமான உண்மையை எனக்கு உணர்த்தியுள்ளார். உண்மையிலேயே, இவர் ஓர் மாமேதை தான்!”
ஸர்.எம்.விஸ்வேஸ்வரையா
(மைசூர் சமஸ்தானத்தின் திவானும், நவீன இந்தியாவின் சிருஷ்டிகர்த்தாவுமான பொறியியல் மேதை)